தீபாவளி பட்டாசு விபத்தை தடுக்க நடிகர் சூர்யா நடித்த விழிப்புணர்வு திரைப்படம் தீயணைப்பு துறை வெளியிடுகிறது!!!

18th of October 2013
சென்னை::தீபாவளி பட்டாசு தீ விபத்தை தடுப்பதற்காக, தீயணைப்பு துறையினர் கடந்த ஒரு வாரமாக சென்னையில் ஆங்காங்கே விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். விழிப்புணர்வு ஒத்திகையும் பொதுமக்களுக்கு நடத்தி காட்டப்படுகிறது. இறுதியாக பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளும் விழிப்புணர்வு ஊர்வலமும் சென்னை தியாகராய நகரில் நடக்க உள்ளது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல, நடிகர் சூர்யா நடித்துள்ள விழிப்புணர்வு திரைப்படத்தையும் தீயணைப்புத்துறையினர் தயாரித்துள்ளனர். 2 நிமிட நேரம் ஓடக்கூடிய இந்த படத்தில் சூர்யா பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த படத்திற்கு பின்னணி இசை சேர்ப்பு நடந்து வருவதாகவும், படம் இறுதி வடிவம் அடைந்தவுடன் பத்திரிக்கையாளர்களுக்கு போட்டு காட்டப்படும் என்றும், அடுத்த கட்டமாக சினிமா தியேட்டர்களில் திரையிடப்படும் என்றும், தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த படம் காட்டப்படும் என்றும், தீயணைப்புத்துறை இயக்குனர் ஆர்.சி.குடவாலா தெரிவித்தார். நடிகர் சூர்யா தானாக முன்வந்து, இலவசமாக நடித்து கொடுத்துள்ளார்.

சென்னையில் தீபாவளி பண்டிகையையொட்டி, பட்டாசு தீயை அணைக்கும் பணியில் சுமார் 1,200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து 200 வீரர்கள் சென்னைக்கு விசேஷமாக வரவழைக்கப்படுகிறார்கள்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments