ராஜாக்கள் இணையும் இசை நிகழ்ச்சி - ரஜினி, கமல் பங்கேற்பு?!!!

29th of October 2013
சென்னை::இளையராஜா தற்போது தொடர்ந்து மாதம் ஒன்றுக்கு ஒரு இசை நிகழ்ச்சி என்று வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். லண்டன், ஆஸ்திரேலியா என்று இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜாவைத் தொடர்ந்து அவருடைய மகன்களும், இசையமைப்பாளர்களுமான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைத்து 'தி கிங் ஆஃப் கிங்ஸ்' (The King of Kings) என்ற பெயரில் மலேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போகிறார்கள்.

மை ஈவண்ட்ஸ் (My Events) என்ற நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் மாதம் 28ஆம் தேதியன்று மலேசியாவில் நடைபெறுகிறது.

இதில் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவுடன், இயக்குநர் வெங்கட் பிரபு, பாடகியும் இசையமைப்பாளருமான இளையராஜாவின் மகள் பவதாரணி மற்றும் முன்னணி பாடகி, பாடகர்களும் பங்கேற்கப் போகிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் 1980களில் இளையராஜாவின் இசையில் வெளியான, அவர்களுடைய பிள்ளைகளுக்கு பிடித்த பாடல்கள் இடம்பெறப் போகிறது. இந்த நிகழ்ச்சியில் இளையராஜா கலந்துகொண்டாலும், இதில் முழுக்க முழுக்க கார்த்திக் ராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் தான் பாடப் போகிறார்கள்.

அதேபோல, 80களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளப் போகிறார்கள். அப்படியென்றால் ரஜினியும், கமலும் கூட இதில் கலந்துகொள்வார்களா? என்று இந்த நிகழ்ச்சியை அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கார்த்திக் ராஜாவிடம் கேட்டதற்கு, "ரஜினி சார் மற்றும் கமல் சாரை இந்த நிகழ்ச்சிக்காக அழைத்திருக்கிறோம். அவர்கள் வருவார்களா வரமாட்டார்களா என்று தெரியாது." என்றார்.
 
tamil matrimony_HOME_468x60.gif

Comments