ரஜினியுடன் விரைவில் நடிப்பேன்: சிம்ரன் அளித்த பேட்டி!!!

7th of October 2013
சென்னை::ரஜினியுடன் விரைவில் நடிக்கப் போவதாக சிம்ரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

தமிழில் கமல், விஜய், அஜீத், எஸ்.ஜே.சூர்யா என நிறைய ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் நடிக்க மட்டும் இதுவரை வாய்ப்பு கிட்ட வில்லை. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருக்கிறது. விரைவில் ரஜினியுடன் நடிப்பேன்.

விஜய் எனக்கு பிடித்த நடிகர். நாங்கள் ஜோடியாக நடித்த படங்கள் ஹிட்டாகியுள்ளது. படங்களில் எங்கள் கெமஸ்ட்ரி நன்றாக இருந்தது. விஜய்யுடன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே என்றும் நினைவில் இருப்பவை.

அஜீத்துடன் நடித்ததும் இனிமையான அனுபவம். அவர் ஒரு ஜென்டில்மேன். வாலி என்ற சர்ச்சைக்குரிய படத்தில் அஜீத்துடன் நடித்தேன். கதை வித்தியாசமான இருந்ததால் உடனே ஒப்புக் கொண்டேன். கமல்ஹாசன் அவரோடு நடிக்கும் நடிகைகளுக்கு உதவுவார். கமலுடன் நடித்த படங்கள் காமெடி கதையம்சம் உள்ளவை. எனக்கு காமெடி படங்கள் மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் இன்னும் எனக்கு வரவேற்பு தருகிறார்கள்.

ஓட்டல்களுக்கு சாப்பிட செல்லும் போதும் ஷாப்பிங் போகும் போதும் என்னை சூழ்ந்து கொண்டு பேசுகிறார்கள். திருமண வாழ்க்கையும் சந்தோஷமாக போகிறது. என் கணவர் தீபக் நல்ல நண்பராக இருக்கிறார்.

இவ்வாறு சிம்ரன் கூறினார்.

tamil matrimony_INNER_468x60.gif

Comments