8th of October 2013
சென்னை::பல மாதங்களுக்கு பிறகு சித்தார்த், சமந்தா மீண்டும் ஜோடிபோட்டு ஒரே காரில் வலம் வந்தனர்.சித்தார்த், சமந்தா கடந்த 2 வருடமாக தீவிரமாக காதலித்து வருகின்றனர். இவர்களின் காதல் முற்றி கல்யாணம் வரை சென்றிருக்கிறது. இதற்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தன. ஷாக் ஆன சமந்தா, திடீர் முடிவு எடுத்தார். அதன்படி இருவரும் கடந்த பல மாதங்களாக பொது இடங்களில் ஜோடியாக வருவதை தவிர்த்தனர். திருமணத்தையும் தள்ளிப்போட்டார். இதையடுத்து சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் மீண்டும் குவிந்தது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த்&சமந்தா ஜோடி, நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டும் விழா ஒன்றில் பங்கேற்றது. பின்னர் ஒருவரையொருவர் கைகோர்த்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். சமந்தா கிளாமராக ஸ்கர்ட் போட்டு வந்து கவர்ந்தார். இதற்கிடையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போது ஒப்புக்கொண்டிருக்கும் படங்களை மட்டுமே நடித்துக்கொடுப்பேன் என குறிப்பிட்டார். அநேகமாக சித்தார்த்துடன் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்குபோடுவார். அதையே இப்படி நாசூக்காக அவர் தெரிவித்திருக்கிறார். அதனாலேயே சித்தார்த்துடன் விழாவிலும் பங்கேற்றுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment