2nd of October 2013
சென்னை::தரணி இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திரிஷாவுக்கு பதில் ஹன்சிகாவை தேர்வு செய்துள்ளதாக தகவல் பரவியுள்ளது. இதனால் திரிஷா அதிர்ச்சியில் உள்ளார்.
ஏற்கனவே விக்ரமுடன் சாமி, பீமா படங்களில் திரிஷா நடித்துள்ளார். விக்ரமை வைத்து தரணி ‘தில்’, ‘தூள்’ படங்களை டைரக்டு செய்துள்ளார். எனவே அவர் இயக்கும் புதுப்படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க தனக்கு வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்த்தார்.
இந்த படம் மூலம் தமிழ்பட உலகில் மேலும் வலுவாக காலூன்றலாம் என்றும் நம்பி இருந்தார். ஆனால் அவை நிராசையாகி விட்டன. ஹன்சிகா இளம் ஹீரோக்களுக்கு பிடித்த நடிகையாக வளர்ந்துள்ளதால் அவரை கதாநாயகியாக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹன்சிகா ஏற்கனவே பிசியாக உள்ளார். அவர் கைவசம் 9 படங்கள் உள்ளன. ஆனாலும் ஹன்சிகா கால்ஷீட்டுக்காக படக்குழுவினர் காத்து இருக்கின்றனர். தனது படவாய்ப்பை தட்டி பறித்ததற்காக ஹன்சிகா மீதும் திரிஷா கோபமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Comments
Post a Comment