8th of October 2013
சென்னை::லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ம் தேதி துவங்குகிறது.
சென்னை::லிங்குசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சூர்யா, சமந்தா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 15ம் தேதி துவங்குகிறது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தைப் பற்றி லிங்குசாமி கூறுகையில்,
முதல் கட்டப் படப்பிடிப்பு மும்பை அல்லது ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இது ஒரு காதல் கலந்த ஆக்ஷன் திரைப்படம். நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கும், சூர்யாவின் ரசிகர்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும்.
இப்படத்தில் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த தோற்றம் சரியாக வரவேண்டும் என்பதற்காக அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்,” என்றார் லிங்குசாமி.
இதன் மூலம் கௌதம் மேனன், சூர்யாவை வைத்து இயக்கவிருக்கும் படம் அடுத்த ஆண்டு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment