சமந்தாவின் விரலில் வைர மோதிரம் காதல் பரிசா?!!!

20th of October 2013
சென்னை::சமந்தா விரலில் திடீரென்று வைர மோதிரம் மின்னுவதால் அதை காதல் பரிசு என்கின்றனர்.சமந்தா, சித்தார்த் காதல் ஜோடி தற்போது பொது இடங்களில் ஜோடியாக வருவதை தவிர்த்து விடுகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அறக்கட்டளை நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்துகொண்டனர். தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா வரும் ஆண்டு முதல் தமிழ் படங்களில் முழுகவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.

நேற்று இவரது புகைப்படம் ஒன்று வெளியானது. சிறிய பூ போட்ட நவநாகரீக உடை அணிந்திருக்கும் சமந்தாவின் விரலில் பெரிய வைர மோதிரம் பளிச்சிட்டது. இதுபற்றி கோலிவுட்டில் பரவலாக பேச்சு எழுந்துள்ளது. அவர் விரலில் அணிந்திருக்கும் மோதிரம் காதல் பரிசாக சித்தார்த் அளித்தது என்று கூறப்படுகிறது.

ஆனால் இதை சமந்தா தரப்பு மறுக்கிறது. இதுபற்றி அவரது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த மோதிரம் காதல் பரிசாக கிடைத்ததா? அல்லது சிறந்த நடிகைக்கான விருது பெற்ற சந்தோஷத்தில் அவரது பெற்றோர் அவருக்கு அணிவித்த மோதிரமா என்று கேட்டிருக்கின்றனர்.

Comments