சமீபகாலமாய், காதல் விவகாரம் தான் பல நடிகைகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட நடிகைகளில், மீரா ஜாஸ்மினும் ஒருவர்!!!
21st of October 2013
சென்னை::சமீபகாலமாய், காதல் விவகாரம் தான் பல நடிகைகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகி வருகிறது. அப்படி பாதிக்கப்பட்ட நடிகைகளில், மீரா ஜாஸ்மினும் ஒருவர்.
சில ஆண்டுகளாகவே, மாண்டலின் ராஜேஷ் என்பவரை காதலித்து வந்த மீரா ஜாஸ்மின், அவரை கல்யாணம் செய்து விட்டதாக செய்தி பரவியதால், ஒப்பந்தமான சில படங்களில் இருந்தே நீக்கப்பட்டார்.ஆனால், மீண்டும் தட்டுத்தடுமாறி, தற்போது, சில படங்களில் நடிக்கும் மீரா ஜாஸ்மின், மாண்டலின் ராஜேஷை திருமணம் செய்து கொள்ளவில்லை என்று பழைய பல்லவியை இப்போதும் பாடி வருகிறார்.
அவரை இன்னமும் தான் காதலித்து வருவதாக சொல்கிறார்.மேலும், ‘எங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டு, நாங்கள் பிரிந்து விட்டதாக வெளியான செய்தியும், உண்மையில்லை’ என்கிறார்.
Comments
Post a Comment