அஜீத் நடித்துள்ள ஆரம்பம் வெளியீடு எப்போது?!!!

17th of October 2013
சென்னை::அஜீத் நடித்துள்ள, "ஆரம்பம்" படம், தீபாவளி அன்று, வெளியாவதாக இருந்தது. ஆனால், இப்போது இரண்டு நாள், முன் கூட்டியே, அதாவது இம்மாதம், 31ம் தேதியே வெளியாகிறதாம். இதுகுறித்து, "ஆரம்பம்" யூனிட் கூறுகையில்,

இந்த படத்தின் பூஜை, டீசர் வெளியீடு, டைட்டில் வெளியீடு என, அனைத்து விஷயங்களுமே, வியாழக்கிழமை தான், வெளியானது. எனவே, படம் ரிலீசாகும்  நாளையும், வியாழக்கிழமையே வைத்தால், நன்றாக இருக்குமே என்பதற்காக தான், முன் கூட்டியே வெளியாக ஏற்பாடு செய்து உள்ளோம்" என்கின்றனர். இதனால், தீபாவளிக்கு, பட்டாசு வெடிக்க காத்திருந்த, அஜீத் ரசிகர்கள், இரண்டு நாட்களுக்கு முன்பே, பட்டாசு வெடிக்கப் போகும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

Comments