ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம்: விஜய்: அரசியல் கட்சி தொடங்க திட்டமா? - நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!!!

23rd of October 2013
சென்னை::உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தி விஜய்யின் தீவிர ரசிகர்களிடையே ஆனந்தத்தையும் கட்சி சார்பற்ற நிலையில் அவரது நடிப்பை மட்டுமே கண்டு ரசிக்கும் நடுநிலையாளர்களிடையே அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
நடிகர் விஜய் புதுக்கட்சி ஆரம்பித்து தீவிர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும், அதற்காக சமீபத்தில் அவர் தனக்கு நெருக்கமான சிலருடன் கேரளாவில் ஆலோசனை நடத்தியதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் ஒன்றில் செய்தி வெளியானது. அதை மறுத்து விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

அதன் விவரம் வருமாறு….“சமீபத்தில் நான் கேரளாவில் ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் சம்பந்தமாக ஆலோசனை நடத்தியதாக ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதைப் படித்து என் ரசிகர்களும், பொது மக்களும், மீடியா நண்பர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

நான், கடந்த இரண்டு மாதங்களாக ஹைதராபாத்தில் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறேன். நான் கேரளாவிற்கே போகவில்லை, அப்பிடியிருக்கும் போது இந்த தவறான செய்தியால் ரசிகர்கள் மட்டுமன்றி நானும் குழப்பம் அடைந்தேன்.

நான் இப்போது வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் இரவு பகலாக உழைத்து வருகிறேன். எனவே தயவு செய்து உண்மை இல்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களையும், மக்களையும் குழப்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்......

ஆகவே, பத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து உண்மையில்லாத செய்திகளை வெளியிட்டு ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்' என்று விஜய் கூறியுள்ளார்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments