1st of October 2013
சென்னை::குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி நடிகை ரீமா கல்லிங்கல் இயக்குனருடன் சேர்ந்து வாழ்கிறார். தமிழில் ‘யுவன் யுவதி' படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாள படங்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார்.
சென்னை::குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி நடிகை ரீமா கல்லிங்கல் இயக்குனருடன் சேர்ந்து வாழ்கிறார். தமிழில் ‘யுவன் யுவதி' படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாள படங்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக உள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு ‘22 பிமேல் கோட்டயம்' என்ற மலையாள படத்தில் ஆஷிக் அபு இயக்கத்தில் நடித்தார். அப்போது ஆஷிக்- ரீமாவுக்கு இடையே காதல் மலர்ந்தது. இது பற்றி
கிசுகிசு வெளியானபோது ரீமா மறுத்தார். பின்னர் இருவரும் ஜோடியாக சுற்றத் தொடங்கினர். இதனால் இவர்கள் காதல் பகிரங்கமானது. இதையடுத்து காதலை ஒப்புக்கொண்டார் ரீமா. ஆஷிக் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். ரீமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.
ஆஷிக்கை மணக்க வேண்டுமென்றால் மதம் மாற வேண்டும் என்று ரீமாவுக்கு ஆஷிக் குடும்பத்தினர் நிபந்தனை விதித்தனர். ஆனால் இதற்கு ரீமா சம்மதிக்கவில்லை. தொடர்ந்து இருவரும் காதலர்களாகவே உலா வந்தனர்.சமீபகாலமாக இருவரும் லிவ்விங் டு கெதர் என்ற மேற்கத்திய பாணியில் வாழத் தொடங்கியுள்ளனர்.
ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசிக்க¤ன்றனர். இதற்கிடையில் இருவீட்டாரும் இவர்களது காதல் பற்றி ஆலோசித்தனர். பின்னர் மதம் மாறாமல் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர். ஆனாலும் இது பற்றி மாறுபட்ட தகவல்கள் மீடியாக்களில் வெளியாகிக்கொண்டிருந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக ரீமா, ஆஷிக்கின் பெற்றோர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணைய தளத்தில் வெளியிட்டனர். இதையடுத்து இவர்களது திருமணம் விரைவில் நடக்கும் என்று மல்லுவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment