23rd of October 2013
சென்னை::விஜய் ஜில்லா படத்திற்காக ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
ஆரம்ப காலங்களில் தான் நடிக்கும் படங்களில் பாடி வந்த விஜய், அதன் பின்னர் பாடுவதை நிறுத்தி விட்டார். இந்நிலையில் பெரிய இடைவெளிக்குப் பிறகு துப்பாக்கி படத்தில் ‘கூகுள்… கூகுள்…’ என்ற பாடல் மூலம் மீண்டும் பாடத் தொடங்கினார் விஜய். இந்தப் பாடல் சூப்பர் ஹிட்டானது.
தொடர்ந்து ‘தலைவா’வுக்காக ‘வாங்கண்ணா… வாங்கண்ணா…’ என்ற பாடல் பாடி அசத்திய விஜய் அடுத்து, ’ஜில்லா’வுக்காகவும் ஒரு பாடலை, ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருக்கிறார். இமான் இசையில் வைரமுத்து எழுதிய மெலடி பாடலை அவர் பாடியிருக்கிறார்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ பேனரில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் படம் ஜில்லா. இதில் விஜய் நாயகனாகவும், காஜல் அகர்வால் நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் மோகன்லாலும் ஒருமுக்கிய பாத்திரத்தில் நடிக்க, நேசன் இயக்கி வரும் இந்தப் படம் வருகிற பொங்கல் விருந்தாக வெளிவரவிருக்கிறது.

Comments
Post a Comment