18th of October 2013
சென்னை::ஆல் இன் ஆல் அழகுராஜா முடிந்ததும் கார்த்தி செய்த முதல்வேலை, கவுண்டமணியை சந்தித்து அவரிடம் ஆசி வாங்கியது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஆல் இன் அழகுராஜா என்ற கேரக்டரில் கவுண்டமணி நடித்திருந்தார். அமெரிக்காவில் பிறக்க வேண்டியவண்டா இந்த ஆல் இன் அழகுராஜா என்று கவுண்டமணி அந்தப் படத்தில் அடித்த லூட்டியை இன்று தொலைக்காட்சியில் பார்த்தாலும் ஜனங்கள் விழுந்து சிரிக்கும். இது எப்படிண்ணே எரியும் என்ற செந்திலின் மேன்டில் காமெயை மறக்க முடியுமா.
ஆல் இன் அழகுராஜா என்ற கேரக்டரை உருவாக்கி அதை பிரபலப்படுத்தியதே கவுண்டமணிதான். அதேபெயரில் படமெடுத்துவிட்டு அவரை பார்க்காமலிருந்தால் எப்படி? அதனால் படம் முடிந்ததும் கவுண்டமணியை சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார் கார்த்தி.
ம்... குரு பக்தி நல்லதுதான்.
Comments
Post a Comment