பாண்டியநாடு படத்தை வாங்கிய வேந்தர் மூவிஸ்!!!

8th of October 2013
சென்னை::நடிகர் விஷால், தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் படம் 'பாண்டியநாடு'. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார்.

முடியும் தருவாயில் உள்ள இப்படத்தின் பாடல் ஒன்று தற்போது பொள்ளாச்சியில் படமாக்கப்பட்டது. ரூ.30 லட்சம் செலவில், பொள்ளாச்சியில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ள இப்பாடல் காட்சியோடு இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது. இந்த பாடலை பிரபல நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். ஷோபி நடனம் அமைத்துள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் தீபாவளியன்று வெளியாகிறது.

இந்த நிலையில், பாண்டியநாடு படத்தின் வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

Comments