5th of October 2013
சென்னை::ஐதராபாத்தில் வணிக வளாக திறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு நடிகை காஜல் அகர்வால் வந்திருந்தார். அவரை காண ரசிகர்கள் பெரும் திரளாக கூடியதால் போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். 2008 ல் சரோஜா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடி விட்டு சென்றார். அப்போது அவ்வளவு அறிமுகம் இல்லை. அதன் பிறகு சிரஞ்சீவி மகன் ராம்சரண் ஜோடியாக மகதீரா என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அந்த ஒரே படம் ஆந்திராவில் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்த்தியது. தொடர்ந்து நிறைய ஹிட் படங்களில் நடித்தார். தமிழிலும் நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி என நடித்து உயர்ந்துள்ளார். இரு மாநிலங்களிலும் ரசிகர் வட்டாரம் பெருகி உள்ளது.
ஐதராபாத்தில் வணிக வளாக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றுக்கு காஜல் அகர்வாலை அழைத்து இருந்தனர். போஸ்டர்கள் மூலம் அவர் வருகைக்காக விளம்பரப்படுத்தி இருந்தார்கள். இதனால் வணிக வளாகத்தை சுற்றி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். காஜல் அகர்வால் வந்ததும் அவரை பார்க்க முண்டியடித்தார்கள். கூட்டத்தை பார்த்து காஜல் அகர்வாலுக்கும் வியப்பு ஏற்பட்டது. கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Comments
Post a Comment