சென்னை::சிங்கம் 2' படத்துக்குப் பின் அடுத்து நடிக்கும் புதிய படம் பற்றி இன்னும் இறுதி முடிவெடுக்காமல் 3 இயக்குநர்களை காத்திருப்பில் வைத்திருக்கிறார் சூர்யா.
இதில் கௌதம்வாசுதேவ்மேனன் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால், கதையில் பெரும் அளவில் மாற்றங்கள் வேண்டும்'' என்று சொல்லி விட்டார். சூது கவ்வும்' நலன்குமராசாமி சொன்ன கதை பிடித்திருந்த போதும், அது பற்றி இறுதி முடிவெடுக்காமல் இருக்கிறார். லிங்குசாமி சொன்ன கதையிலும் நிறைய மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லி விட்டார். இதனால் மூன்று படங்களிலும் அவர் நடிப்பாரா? என்பது பற்றி தெளிவான முடிவுகள் தெரியவில்லை.
இந்நிலையில் ஸ்கிரிப்ட் தயாராகி விட்டதாக சூர்யாவுக்கு அவசரமாக தூது விட்டிருக்கிறார் கௌதம்வாசுதேவ்மேனன். இது பற்றி தன் இணைய தள பக்கத்தில் அவர் கூறும் போது...""சூர்யாவுக்காக முதலில் தயாரித்த ஸ்கிரிப்ட்டை மாற்றி விட்டேன். எனவே இருவரும் விரைவில் ஷூட்டிங் தொடங்குவோம். நல்ல நேரம் எதிரில் காத்திருக்கிறது'' என்றார். இதே போல் லிங்குசாமி தரப்பும் மாற்றப்பட்ட கதையுடன் காத்திருக்கிறதாம்.

Comments
Post a Comment