24th of October 2013
சென்னை::ஏற்கனவே தெரிந்ததுதான். இப்போது அதிகாரப்பூர்வமாக உறுததியாகியிருக்கிறது.
வெற்றிமாறன் இதுவரை இரண்டு படங்கள் இயக்கியிருக்கிறார். பொல்லாதவன், ஆடுகளம். இரண்டிலும் ஹீரோ தனுஷ். முதல் படத்தை கதிரேசனும் இரண்டாவது படத்தை தயாநிதி அழகிரியும் தயாரித்தனர். மூன்றாவதும் தனுஷுடன். தயாரிப்பு அதே தயாநிதி அழகிரி.
வேங்கைசாமி என படத்துக்கு பெயர் வைத்திருப்பதாக கூறுகிறார்கள். உறுதியில்லை. ஜி.வி.பிரகாஷ் இசை, ஒளிப்பதிவு வேல்ராஜ் என்று அதே டீம். கிஷோரும் இந்தப் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
படப்பிடிப்பை அடர்ந்த வனங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். கதைக்களம் அப்படி. வழக்கு எண் மனிஷா யாதவை வைத்து போட்டோஷூட் நடத்தினர். அது திருப்தியாக இருக்க அவரையே நாயகியாக்கியிருக்கிறார்கள்.
Comments
Post a Comment