29th of October 2013
சென்னை::அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி விஜய் ரசிகர்கள் மதுரையில் பேனர் வைத்துள்ளனர்.
அஜீத் குமாரும், விஜய்யும் ஒரு சமயத்தில் எலியும், பூனையுமாக இருந்தது என்னவோ உண்மைதான். இருவரும், ஒருவரையொருவர் தங்களது படத்தில் நக்கல் அடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இதனால் அவர்களின் ரசிகர்களிடமும் இடைவெளி இருந்து வந்தது.
இந்நிலையில் பக்குவமடைந்த அஜீத்தும், விஜய்யும் தற்போது நண்பர்களாகிவிட்டனர். இ
தையடுத்து அவர்களின் ரசிகர்களும் நண்பர்களாகிவிட்டனர். இப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு அஜீத் நடிப்பில் ஆரம்பம் படம் வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் அஜீத்தின் ஆரம்பம் படம் வெற்றி பெற வாழ்த்தி மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில் அஜீத்துக்கு விஜய் வாட்ச் கட்டிவிடுவது போன்ற புகைப்படம் உள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Comments
Post a Comment