5th of October 2013
சென்னை::பிரியாணி வெளியீடு பொங்கலுக்காவது இருக்குமா என்பதுதான் மிகப் பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி - ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பிரியாணி. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். மங்காத்தா வெற்றிக்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கும் படமென்பதால் பிரியாணி மீதான எதிர்பார்பு அதிகரித்துள்ளது.
இப்படம் செப்டம்பர் மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டியது. தாமதமானாலும், தீபாவளிக்கு வந்து விடும் என வெங்கட் பிரபுவின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்க, தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து, ‘பிரியாணி ’ பொங்கலுக்குத்தான் என செய்தி வெளியானது. இதனிடையே இப்படத்தின் வெளியீடு பொங்கலுக்காவது இருக்குமா என்பதுதான் மிகப் பெரிய சந்தேகமாக எழுந்துள்ளது.
பிரியாணி'யை தள்ளிப்போட்ட காரணத்தை விசாரித்தால் பிரியாணி படத்தைப் பார்த்த கார்த்தி தரப்பினருக்கு திருப்தி இல்லை என்கிறார்கள். சில காட்சிகளை மறுபடியும் எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார்களாம். ஆனால், வெங்கட் பிரபுவோ அதற்கு சம்மதிக்கவில்லையாம்.
இதனால் எரிச்சல் அடைந்த கார்த்தி தரப்பினர், அவசர அவசரமாக ஆல் இன் ஆல் அழகுராஜா'வை முடிக்கச் சொல்லி தீபாவளி வெளியீடு என அறிவித்துவிட்டனர். இப்படத்தின் வெளியீட்டுக்குப் பின்தான் ‘பிரியாணி’யின் நிலைமை தெரியும்.
Comments
Post a Comment