9th of October 2013
சென்னை::நடிகை சுனைனா அவருடைய பெயரை ‘அனுஷா’ என்று மாற்றி விட்டாராம்.
காதலில் விழுந்தேன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சுனைனா. தொடர்ந்து, மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், நீர்ப்பறவை, சமர் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் நீர்ப்பறவை படத்தில் சுனைனாவின் நடிப்பு பேசப்பட்டது. இருப்பினும் அவரால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை. இந்நிலையில் சுனைனா தனது பெயரை ‘அனுஷா’ என்று மாற்றி விட்டாராம்.
இது குறித்து அவரிடம் கேட்டதற்கு... “இது முற்றிலும் எனது பெற்றோருடைய முடிவு. சிறு வயதிலேயே ஜோதிடர் சொன்ன எழுத்தில் எனது பெயரை வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், அப்போது அதன்படி வைக்காமல் எனக்கு சுனைனா என்று பெயர் வைத்தனர்.
இப்போது, மீண்டும் ஜோதிடரை சென்று பார்த்த போது, எனக்குப் பொருத்தமான எழுத்தில் பெயர் வைத்தால் நல்லது என்று சொன்னார்கள். அதனால் எனது பெயரை ‘அனுஷா’ என மாற்றியிருக்கிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது…எனது நிஜ கேரக்டர் எப்போதும் அப்படியேதான் இருக்கும்…இருந்தாலும் எனது புதிய பெயர் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது, ” என்றார்.
இப்போது நடித்து வரும் ‘நம்பியார்’ படத்திலிருந்து அனுஷா என்றுதான் அழைக்கப்படப் போகிறார் சுனைனா…

Comments
Post a Comment