சென்னை::விரைவில் திருமண பந்தத்தில் இணையப்போகிறாராம் பொலிவூட்டின் கவர்ச்சிகன்னி மல்லிகா ஷெராவத். அரியானா மாநிலத்தின் ஜாட் குடும்பத்தில் பிறந்த மல்லிகா மும்பையில் ெமாடலிங் தொழில் செய்தார்.
பின்பு தொலைக்காட்சி மற்றும் சினிமா படங்களில் கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை கவர்ந்த இவர் ெபாலிவூட்டில் பிரபல கவர்ச்சி நடிகை என்ற உச்சத்திற்கே சென்றார்.
இந்நிலையில் 'லைப் ஓ.கே' என்ற ஆங்கில தொலைக்காட்சியில் மாப்பிள்ளை தேடும் வித்தியாசமான நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிறது.
இதில் நடிகை மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டார். அவரை மணக்க விரும்பும் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில் நடிகை மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டார். அவரை மணக்க விரும்பும் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அவர்களிடம் மல்லிகா ஷெராவத்தை விரும்பும் காரணங்கள் பற்றி விளக்கங்கள் கேட்கப்பட்டன. மேலும் அவர்களுக்கான தகுதி திறமை போட்டியும் நடந்தது.
இறுதியில் 15 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர். இதில் ஜாஷன் சிங் என்பவர் மல்லிகாவை கரம் பிடிக்க விரும்பினார்.
சினிமா நடிகையாக மட்டுமல்லாது மற்ற விடயங்களிலும் அவரை பிடித்து இருப்பதாக கூறியுள்ளார்.
ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதமான காரணங்களை தெரிவித்தனர். முடிவில் ஒரு போட்டியாளர் பிடித்துப் போய்விடவே அவரை தனது வாழ்க்கை துணையாக மல்லிகா ஷெராவத் தேர்வு செய்தார்.
இந்நிகழ்ச்சி 'லைப் ஓ.கே.' சேனலில் ஒளிபரப்பானது. இது தொலைக்காட்சி ஷோ என்றாலும் உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியாகும்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளரை மல்லிகா ஷெராவத் விரைவில் மணக்க இருக்கிறார்.
Comments
Post a Comment