என் அழகு ரகசியம்: நடிகை டாப்ஸி!!!

5th of October 2013
சென்னை::நடிகை டாப்ஸி முன்பை விட அழகாக மாறி இருக்கிறார். உடல் கட்டு கோப்பிலும் நேர்த்தி முகத்தில் பொதுப் பொலிவு அழகு ரகசியத்துக்கு காரணம் என்ன என்று கேட்ட போது நடனம் என்றார். அவர் சொல்கிறார். நான் சினிமாவில் அறிமுகமானதுமே தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க துவங்கினேன். அப்போது டைரக்டர்கள் உடல் எடையை குறைக்கும்படி என்னிடம் வற்புறுத்தினர்.

என் கேரக்டருக்கு ஒல்லியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். தற்போது நான் வெளி நாட்டு நடன வகையான ஜும்பா நடனத்தை கற்று வருகிறேன். இந்த நடனம் என் உடம்பை கட்டு கோப்பாக வைக்க உதவுகிறது. தற்போது நான் இந்திப் படங்களிலும் நடித்து வருகிறேன்.

இவ்வாறு டாப்ஸி கூறினார்.

டாப்ஸி கங்கா என்ற பேய் படத்திலும் நடிக்கிறார். இது முனி படத்தின் மூன்றாவது பாகம் ஆகும். இதில் கதாநாயகனாக நடிக்கும் லாரன்ஸ் விபத்தில் சிக்கி ஓய்வில் இருப்பதால் படப்பிடிப்பு தற்காலிகாக நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரு மாதம் கழித்து மீண்டும் துவங்கும் இதன் படப்பிடிப்பில் டாப்ஸி பங்கேற்று நடிக்க உள்ளார்.

Comments