5th of October 2013
சென்னை::அடுத்த ரவுண்ட் நடிகை என்கிற அந்தஸ்த்தை பிரியா ஆனந்த்
பெற்றுவிட்டார். அதர்வாவுடன் இரும்புக்குதிரை, கார்த்தி மகன் கவுதமுடன் வை ராஜா வை,
கிருத்திகா உதயநிதி இயக்கும் வணக்கம் சென்னை, விக்ரம் பிரபுவுடன் அரிமா நம்பி என்று
முன்னணி லிஸ்ட் படங்களாக பார்த்து பார்த்து நடித்து வருகிறார். இந்த அலங்கார
விளக்கில் மேலும் ஒரு திரியை பற்ற வைத்தது போல, ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும்
பென்சில் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
ஒரு காலத்தில் நான் நடித்த படங்கள் பெரிய வெற்றியடையாத போது சின்ன
வருத்தம் இருக்கும். இப்போது நமக்கான காலம் வரும்போது அந்த வெற்றிகளும் நமக்கு
அருகில் வரும். அதுவரை பொறுத்திருப்பது ஒன்றுதான் புத்திசாலித்தனம் என்கிற
வாழ்வியல் தத்துவத்தை கற்றுக் கொண்டேன் என்கிறார். விட்டால் தத்துவ வகுப்பு
எடுக்கிற அளவுக்கு பேசுவார் போல... எல்லாம் வெற்றி தரும் விளக்கம். வேறென்ன...?
Comments
Post a Comment