ராஜாராணி படத்தின் புரமோஷனுக்காக ஆர்யாவும் படத்தின் இயக்குனர் அட்லீயும் தமிழ்நாடு முழுவதும் திடீர் தியேட்டர் விசிட்!!!
சென்னை::ராஜாராணி படத்தின் புரமோஷனுக்காக ஆர்யாவும் படத்தின் இயக்குனர் அட்லீயும் தமிழ்நாடு முழுவதும் திடீர் தியேட்டர் விசிட் அடித்து வருகிறார்கள். ஈரோடு அபிராமி தியேட்டருக்கு வந்த ஆர்யா படம் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களிடயே கலந்துரையாடினார். பின்னர் தியேட்டரில் காத்துக்கொண்டிருந்த நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: "ஈரோடு ஆடியன்ஸ் சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். ஈரோட்டில் ஒரு படம் நல்லா ஓடிச்சின்னா அதே ரிசல்ட் தமிழ்நாடு முழுக்க இருக்கும். ஈரோடு ரசிகர்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம்.
நான் எப்பவுமே பேமிலி எண்டர்டெயினிங் படத்தில் நடிக்கிறதையே விரும்புறேன். அது மாதிரி ஸ்டோரியத்தான் செலக்ட் பண்ணி நடிக்கிறேன். எந்த டைரக்டர்கிட்ட கதைகேட்டாலும் கதை பிடிச்சிருந்தா நடிக்க ஓகே சொல்லிடுவேன். ஓகே சொன்ன பிறகு எனக்காக கதையை இப்படி மாத்துங்க, அப்படி மாத்துங்க, இந்த மாதிரி சீன் வையுங்கன்னு சொல்லவே மாட்டேன். அது அவுங்களோடு ப்ரீடம். ராஜா ராணி படத்தை சிலர் மவுனராகம் படத்தோட கம்பேர் பண்ணி பேசுறாங்க. இதுக்காக நான் வருத்தப்படல. ஒரு அற்புதமான படத்தோட இதை ஒப்பிடுறதை சந்தோஷமா ஏத்துக்கிறேன். சந்தோஷமாத்தான் இருக்கு" என்றார்.

Comments
Post a Comment