இஷ்டம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமான நடிகை நிஷா அகர்வாலுக்கு டிசம்பரில் திருமணம்!!!

20th of October 2013
சென்னை::இஷ்டம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் நிஷா அகர்வால். இவர் நடிகை காஜல் அகர்வாலின் தங்கையும்கூட. எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிஷா அகர்வால் தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கரண் வலேச்சாவுக்கும் திருமணம் முடித்து வைக்க அவர்களது பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இவர்களது திருமணம் வரும் டிசம்பர் மாதம் 28-ந் தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

இவர்களுடைய திருமணத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளைச் சேர்ந்த திரைப்பட நடிகர், நடிகையர்கள் ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
tamil matrimony_INNER_468x60.gif

Comments