எம்.பி.யான பிறகு குத்தாட்டம் போட முடியுமா..? : தயாரிப்பாளரிடம் கெத்து காட்டிய ‘குத்து’ ரம்யா!!!

31st of October 2013
சென்னை::பாராளுமன்ற எம்.பி.யான பிறகு இனிமேல் நான் குட்டை பாவாடையில் மரத்தை சுற்றி ஆட முடியுமா?” என ஆவேசப்பட்டிருக்கிறாராம் நடிகை ‘குத்து’ ரம்யா.
சிம்பு நடித்த ‘குத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரம்யா. அந்தப்படத்திலிருந்து அவரை எல்லோரும் ‘குத்து’ ரம்யா ‘குத்து’ ரம்யா என்றே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். தமிழில் கிரி, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட சில படங்களில் நடித்த ரம்யா அதன்பிறகு தனது தாய் மொழியான கன்னடப் படங்களில் நடித்து அதன்பிறகு கர்நாடக அரசியலில் தீவிரமாக களமிறங்கினார்.
சமீபத்தில் கர்நாடகாவில் மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் பாராளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் வெற்றி பெற்றார். அதனால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். இதனால் அவர் கடைசியாக நடித்த ‘நீர்டோஸ்’ என்ற கன்னடப் படம் பாதியில் நிற்கிறது.
இதனால் கடுப்பான அந்தப்படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவுமான ஜெகதீஷ் ரம்யா எம்.பி.யாகி விட்டதால் அவர் நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். அவர் என் படத்தில் நடிக்க மறுப்பது தவறு. அவர் விலகுவதாக இருந்தால் படத்துக்கு இதுவரை செலவிட்ட ரூ. 4 கோடியை திருப்பி தர வேண்டும் என்று ரம்யா மீது புகார் கூறினார்.
ஆனால் இதற்கு பதிலடி கொடுத்துள்ள ரம்யா மக்கள் என் மீது நம்பிக்கை வைத்து எம்.பி.யாக தேர்வு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதனால் இனிமேல் என்னால் சினிமாவில் நடிக்க முடியாது. எனக்குத் தெரிந்து அரசியலுக்கு சென்றபிறகு எந்த நடிகையும் மீண்டும் படங்களில் நடிக்கவில்லை.
அப்படியிருக்கும் போது எம்.பி.யான பிறகு நான் குட்டை பாவடையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து கொண்டு மரத்தை சுற்றி ஹீரோவுடன் டூயட் பாடி ஆடிக்கொண்டிருக்க முடியுமா? என்று கூறியிருக்கிறார் ரம்யா.
அட விடுங்க சார் அதான் அரசியலுக்குள்ள போயிட்டாங்கள்ல, அந்த 4 கோடியெல்லாம் ரம்யாவுக்கு இனிமே அசால்ட்டுதான்…
tamil matrimony_HOME_468x60.gif

Comments