17th of October 2013
சென்னை::பாண்டிராஜ் இயக்கிய 'மெரினா' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர்தான் சிவகார்த்திகேயன்.
தொடர்ந்து 'மனம் கொத்திப் பறவை', 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என வரிசையாக நடித்தார். இதில் 'எதிர்நீச்சல்', 'கேடிபில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற படங்களின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூவை மேலும் உயர்த்தியது.
எதிர்நீச்சல் படத்தில் குறிப்பிட்ட சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்துக்காக இரண்டு கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். இப்படம் 7 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலைத் தொட்டதால், தற்போது தன் சம்பளத்தை 5 கோடியாக அதிரடியாக உயர்த்திவிட்டாராம் சிவகார்த்திகேயன்.
ஆனால் சிவகார்த்திகேயனோ, கொடுப்பதை வாங்கிக் கொள்கிறேன்.. ரேட் பேசுவதெல்லாம் கிடையாது என்று கூறி வருகிறார். இந்நிலையில் உதயநிதி, சிவகார்த்திகேயனிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார். இதற்கு சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன் 4 கோடி கொடுப்பீர்களா என கேட்டிருக்கிறார். அதிர்ந்து போன உதயநிதி இரண்டு கோடி வரை கொடுக்க முன் வந்திருக்கிறார். ஆனால் சிவாகார்த்திகேயனோ 'நோ' சொல்லிவிட்டாராம்.
ஒரு சமயத்தில் வாய்ப்பு வந்தால் போதும் என்று காத்திருந்த சிவகார்த்திதேயன் இப்போது பரபரப்பான நட்சத்திரமாக மாறியுள்ளார்.
Comments
Post a Comment