இந்தி படம் கைநழுவிப்போனது வருத்தமா?: அமலா பால் பதில்!!!

28th of October 2013
சென்னை::இந்தி படம் கைநழுவிப்போனது வருத்தமா? என்றதற்கு பதில் அளித்தார் அமலா பால். மைனா, தெய்வத் திருமகள், தலைவா படங்களில் நடித்த அமலா பால் தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளியான ‘ரமணாÕ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க அமலா பாலுக்கு வாய்ப்பு வந்தது. பிறகு அது கைநழுவிப்போனது. இது உங்களுக்கு ஏமாற்றமா என்று கேட்டதற்கு அமலா பால் பதில் அளித்தார்.

அவர் கூறும்போது,‘இது எனக்கு ஏமாற்றம் இல்லை. நான் அந்த படத்தை ஏற்க மறுத்தேன். கால்ஷீட் பிரச்னையால் அந்த படத்தை ஏற்க முடியவிலை. ஆனால் கூடிய விரைவில் இந்தி படத்தில் நடிப்பேன். தற்போது தென்னிந்திய படங்களில் மிக சவுகரியமாக நடித்துக்கொண்டிருக்கிறேன். இதுவே எனக்கு எல்லாம் கொடுக்கிறது. பாலிவுட் வாய்ப்பு வந்தாலும் அது என்னை கவரும் வேடமாக இருந்தால் அதை நிச்சயம் ஏற்பேன் என்றார்.

Comments