ஹன்சிகா, தமன்னா, சமந்தா, பிரியாமணி ஆகிய நால்வரும் தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்!!!

24th of October 2013
சென்னை::நடிகைகள் ஹன்சிகா, தமன்னா, சமந்தா, பிரியாமணி ஆகிய நால்வரும் தங்கள் திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.

ஹன்சிகாவுக்கும் சிம்புவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இதனை அவர்களே பகிரங்கமாக அறிவித்தனர். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள ஹன்சிகா சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் தள்ளி வைத்துள்ளார். இது குறித்து ஹன்சிகா கூறும்போது ‘அடுத்த ஐந்து வருடத்துக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. எனக்கு 22 வயதுதான் ஆகிறது. நிறைய படங்களில் நடித்து வருகிறேன் என்றார்.

சமந்தாவும், சித்தார்த்தும் காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அதன் பிறகு சமந்தா நடிக்கமாட்டார் என்றும் கூறப்பட்டது. தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு தமிழிலில் மட்டுமே நடித்து வருகிறார். சமந்தாவுக்கும் சித்தார்த்துக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வதாகவும் செய்திகள் பரவின. இதனை சமந்தா மறுத்தார். எனக்கு ரகசிய திருமணம் நடக்கவில்லை. இப்போது திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை. சில வருடங்கள் கழித்தே என் திருமணம் நடக்கும் என்று அவர் கூறினார்.

இதுபோல் தமன்னாவும் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது ‘என் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனக்கு இருபது வயதுதான் ஆகிறது. எனவே இப்போதைக்கு என் திருமணம் நடக்காது என்றார்.

பிரியாமணிக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாகவும் இந்த வருடத்திலேயே திருமணம் செய்து கொள்வார் என்றும் கன்னட பட உலகில் கிசுகிசுக்கள் வெளியாயின. இதை பிரியாமணி மறுத்தார். அவர் கூறும்போது ‘நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். ஆனால் அது இப்போது இல்லை. மூன்று வருடங்கள் ஆகலாம். நான் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது என்றார்.

tamil matrimony_INNER_468x60.gif

Comments