16th of October 2013
சென்னை::ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தொடையழகி என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ரம்பா ‘உழவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இருந்தாலும், ‘உள்ளத்தை அள்ளித்தா’ படம்தான் அவருக்கு நடிகை என்ற உயர்ந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. அப்படத்தில் இடம்பெற்ற ‘அழகிய லைலா’ என்ற பாடலில் இவர் தொடையை காட்டி ஆடிய ஆட்டத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை.
கணவருடன் மனகசப்பு ஏற்பட்டு அவரை பிரிந்த ரம்பா மீண்டும் நடிக்க வந்தார். 1990களில் த்ரிரோசஸ், அண்ணாமலை, ராசி, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் ரம்பா. இவர் கனடா நாட்டு தொழில் அதிபர் இந்திரன் பத்மனாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், கணவருடன் ரம்பாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்து விட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது.
திருமணம் முடிந்த பிறகு அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நடிக்க ரம்பாவுக்கு அழைப்பு வந்தது. ஆனால், கணவர் என்ன சொன்னாரோ. ரம்பா நடிக்காமல் பிடிவாதமாக இருந்தார். இப்போது அந்த பிடிவாதத்தை கைவிட்டு நடிக்க வந்திருக்கிறார். தமிழில் சிம்பு நடிக்கும் படத்தில் அவருக்கு அக்காவாக நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதுதவிர தெலுங்கு படங்களிலும் நடிக்க தூது விட்டிருக்கிறார் ரம்பா. ‘ஹீரோயின்தான் என்றில்லை, துணை கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் ஓ.கே.தான்’ என்று சொல்லி இருக்கிறாராம்.

Comments
Post a Comment