ஜில்லாவில் விஜய் போலீஸ், மோகன் லால் தாதா!!!

10th of October 2013
சென்னை::ஜில்லாவில் விஜய் போலீஸாகவும் மோகன் லால் தாதாவாகவும் நடிக்கின்றனர்.
 
தலைவா படத்துக்குப் பிறகு விஜய் நடிப்பில் பொங்கல் ஜல்லிக்கட்டாக திரைக்கு வரவிருக்கும் படம்தான் ஜில்லா. இதில் காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா பாக்யராஜ், பரோட்டா சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர். நேசன் இயக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். படத்தை ஆர்.பி.சௌதிரி பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
 
ஜில்லாவில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்திலும் அவருடைய அப்பாவாக வரும் மோகன் லால் தாதா கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்களாம். ஒரு தாதாவின் மகன் எப்படி போலீஸாகிறான் என்பதுதான் படத்தின் கதை. முதல் பாதி முழுவதும் காமெடி, காதல் என கலகலவென விஜய்க்கு உரிய ஸ்டைலிலும், இரண்டாம் பாதி ஆக்‌ஷன் மற்றும் பல திருப்பங்களுடன் இருக்கும் என ஜில்லா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
அண்மையில்தான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை ஐதராபாத்தில் படமாக்கினார்கள். அதாவது, மிக பிரம்மாண்டமான முறையில் செட் அமைத்து அதிக கேமராக்களை வைத்து இயக்குனர் ஷங்கர் பட பாணியில் இப்படப்பிடிப்பை நடத்திருக்கிறார்கள்.

Comments