10th of October 2013
சென்னை::தனது அடுத்த படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் ஆர்யா. ஆரம்பத்தில் நிலா, பிறகு நயன்தாரா, அதன் பின் அனுஷ்கா ஆகியோருடன் கிசு கிசுக்கப¢பட்டவர் ஆர்யா. இப்போது மகிழ்திருமேனி இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்கிறார். இதில் ஹீரோயினாக ஸ்ருதி ஹாசனை தேர்வு செய்ய வேண்டும் என இயக்குனரிடம் சொல்லி இருக்கிறாராம் ஆர்யா.
தமிழ் சினிமாவின் பிளே பாய் என பெயர் வாங்கிய சிம்புவையே ஆர்யா ஓரம்கட்டிவிட்டார். இப்போது கோலிவுட்டின் ஹாட் பிளேபாய் ஆர்யாதான் என பேசப்படுகிறது. அதேபோல் தன்னுடன் ஜோடி சேரும் ஹீரோக்களுடன் நட்பாக பழகுவது ஸ்ருதி ஹாசனின் வழக்கம். அதனால் ஸ்ருதியுடன் நடித்தால் ஆஃப் ஸ்கிரீனிலும் தங்கள் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும் என நம்புகிறாராம் ஆர்யா.
ஹீரோஹீரோயின் நட்பாக பழகுவதால் அந்த பட ஷூட்டிங்கில் ஆரோக்கியமான சூழல் நிலவும், ஷூட்டிங்கும் வேகமாக நடக்கும் என்பது இண்டஸ்ட்ரி நியதி. அதனால் ஸ்ருதியின் கால்ஷீட்டை பெற மகிழ்திருமேனி டீம் பலத்த முயற்சியில் இறங்கியுள்ளது.
Comments
Post a Comment