சென்னை::வீடு மனைவி மக்கள், தாயா தாரமா, பெண்கள் வீட்டின் கண்கள், நல்ல காலம் பொறந்தாச்சு, பாண்டிய நாட்டு தங்கம், மகனே என் மருமகனே, எங்க ஊரு மாப்பிள்ளை, பட்ஜெட் பத்மநாபன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிவர் டி.பி.கஜேந்திரன். தற்போது காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக பல படங்களில் நடித்து வரும் இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு படம் ஒன்றை இயக்குகிறார்.
'ஆசை தோசை' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்குவதோடு, டி.பி.கஜேந்திரனே, தனது 'முத்துலட்சுமி மூவிஸ்' நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார்.
பல காமெடி நடிகர்கள் நடிக்கும் முழுக்க முழுக்க நகைச்சுவைப் படமாக உருவாக உள்ள இப்படத்தில், ஹீரோவாக முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அதற்கான பேச்சு வார்த்தையும், பிற நடிகர், நடிகைகளின் தேர்வும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Comments
Post a Comment