30th of October 2013
சென்னை::புதிதாக தயாரிப்பாளர் அவதாரமெடுத்துள்ள நடிகர் விஷால் மீண்டும் பாலாவின் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளதாக உறுதிசெய்துள்ளார்.
அண்மையில் பாலாவை சந்தித்துள்ளார் விஷால். இதன்போது புதிய படத்துக்காக அடுத்த வருடம் கோல் ஷீட்டை வைத்திருக்குமாறு பாலா தெரிவித்ததாக விஷால் கூறியுள்ளார்.
இது தொடர்பான முறையான அறிவிப்பை பாலா அடுத்த இரு மாதங்களில் வெளியிடுவார் எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீபாவளி வெளியீடாக விஷால் நடித்து தயாரித்துள்ள பாண்டியநாடு படம் வெளியாகவுள்ளது. இதன் பின்னர் திருவின் இயக்கத்தில் சொந்த தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தினைத் தொடர்ந்து அடுத்த வருடம் பாலாவின் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளார். ஏற்கெனவே பாலாவின் அவன் இவன் படத்தில் விஷால் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment