28th of October 2013
சென்னை::ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் கால்ஷீட்டுக்காக சூர்யா காத்திருக்கிறார்.
சிங்கம் 2 படத்துக்குப் பிறகு சூர்யா ஒரு வழியாக லிங்குசாமி படத்துக்கு தயாராகிவிட்டார். இந்தப் படத்தை லிங்குசாமியே தயாரித்து இயக்கவும் செய்கிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சந்தோஷ் சிவத்தால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
காரணம், அவர் சிலோன் படத்தில் பிஸியாக உள்ளார். இதனால் அவரால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த பட வேலைகளை நவம்பர் முதல் வாரத்தில் முடித்துவிட்டு வருவதாக சந்தோஷ் தெரிவித்தார். இதனால் படக்குழுவுடன் சூர்யா சந்தோஷுக்காக காத்திருக்கிறார்.
அவர் வந்த பிறகு நவம்பர் 2 வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யாவின் இந்தப் படத்திற்குதான் உலகிலேயே முதன் முறையாக ‘ரெட் டிராகன்’ என்னும் கேமிராவை பயன்படுத்த இருக்கிறார் சந்தோஷ் சிவன்.

Comments
Post a Comment