அரண்மனை படத்தில் ஹன்சிகாவுக்காக காத்திருந்த ஹீரோயின்கள்!!!

8th of October 2013
சென்னை::சுந்தர்.சி இயக்கிய ‘தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் நடித்த ஹன்சிகா மீண்டும் அவர் இயக்கும் ‘அரண்மனை படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட ஷூட்டிங்கில் ஹன்சிகா பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததால் இப்படத்தில் நடிக்க தாமதம் ஆனது.
இதனால் பட குழுவுடன் லட்சுமிராய், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் காத்திருந்தனர்.
 
நேற்று முன்தினம்தான் ஹன்சிகா படப்பிடிப்பில் கலந்துகொண்டார். திகில் படமாக உருவாகும் இதில் நடித்தபோது ஹன்சிகா பயத்தில் நடுங்கினாராம். இதற்குமுன் நான் ஏற்று நடித்த வேடங்களுக்காக இதுபோல் நடுங்கியது கிடையாது. முதன்முறையாக எனக்கு பயம் தொற்றிக்கொண்டது.
 
அரண்மனை ஷூட்டிங்கில் பங்கேற்றது பற்றிதான் சொல்கிறேன். இந்த படமே எனக்கு சவாலானது. இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்ததில்லை என்றார். படத்தில் அவர் பேயாக நடிப்பதாக தகவல். தான் நடித்த காட்சிகளை மானிட்டரில் பார்த்துதான் அவர் பயந்தாராம்.

Comments