16th of October 2013
சென்னை::சூப்பர்’ என்ற படம் மூலம் 2005-ம் ஆண்டு தெலுங்கில் அறிமுகமானவர், அனுஷ்கா. நான்கு படங்களில் நடித்தபிறகு, தமிழில் மாதவனுக்கு ஜோடியாக ‘ரெண்டு’ படத்தில் அறிமுகமானார்.
ஆனால், அந்தப் படம் சரியாகப் போகாததால் மீண்டும் ஆந்திராப் பக்கமே ஒதுங்கினார். அங்கு அவர் காட்டிய கவர்ச்சியைப் பார்த்து விஜய்க்கு ஜோடியாக ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடிக்க வைத்தனர்.
வேட்டைக்காரன்’ வசூலில் வேட்டையாட, அனுஷ்கா ரசிகர்கள் மனதை வேட்டையாட… பிறகென்ன, சூர்யா, கார்த்தி, விக்ரம், சிம்பு, ஆர்யா என தமிழின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடிவிட்டார்.
தற்போது தெலுங்கில் ‘ருத்ரம்மா தேவி’, ‘பாகுபாலி’ என இரண்டு மிகப்பெரிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களுமே தன்னை உச்சத்தில் தூக்கி நிறுத்தும் என நினைக்கிறார்.
எனவே, அந்த புகழுடனே கல்யாணமும் பண்ணிக்கலாம் என நினைக்கிறாராம். 31 வயது ஆகிவிட்டதால், இதற்கு மேல் கல்யாணத்தைத் தள்ளிப்போட்டால் கதைக்கு ஆகாது என சொந்த பந்தங்களும் நச்சரிக்கிறார்களாம்.
அதனால், கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு அனுஷ்கா வந்திருப்பதாகத் தெரிகிறது. இதற்காக, ‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பைக் கூட மறுத்துவிட்டாராம்.
Comments
Post a Comment