மூன்று வருடங்களுக்கு பிறகே திருமணம்: காஜல்அகர்வால்!!!

28th of October 2013
சென்னை::நடிகை காஜல்அகர்வால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு பட உலகில் பரபரப்பு செய்தி வெளியானது. இதனால் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றும் கூறப்பட்டது. தெலுங்கில் காஜல் அகர்வாலுக்கு படங்கள் கைவசம் இல்லை.

தமிழில் விஜய் ஜோடியாக ஜில்லா படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடிந்ததும் திருமணம் நடக்கும் என்றும் செய்தி வெளியானது. இதற்கு பதில் அளித்து காஜல்அகர்வால் சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

காஜல்அகர்வால் உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டார். மூன்று வருடங்களுக்கு பிறகே அவர் திருமணம் நடக்கும். தற்போது தமிழில் இரண்டு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். திருமணம் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. காஜல்அகர்வால் தங்கை நிஷாவுக்கு திருமணம் நடக்க உள்ளது. அந்த திருமண வேலைகளில் அவர் ஈடுபட்டு இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக சொல்வது உண்மையல்ல. தெலுங்கு, தமிழில் இரண்டு புது பட வாய்ப்புகள் வந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif 

Comments