காதல் கசந்த கதாநாயகிகள்: காதல்ல பிரேக் அப் சகஜம்:!!!

28th of October 2013
சென்னை::ஹீரோயின்கள் காதல் வலையில் விழுவதும் பிரிவதும் சினிமாவில் தொடரும் விஷயம்தான். சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இதற்கு கதை சொல்வார்கள். ‘காதல்ல பிரேக் அப் சகஜம்’ என்று ஸ்டேட்மென்ட் விடும் அளவுக்கு போய்விட்டது, லேட்டஸ்ட் காதல். சமீபத்தில், காதல் கசந்து போன ஹீரோயின்கள் பற்றிய லிஸ்ட் இது.
பாவனா:

அந்த இயக்குனருடன் காதலாகி கசிந்துருகி இருந்தார் முதலில். செல்போன் முதல் எல்லாவற்றையும் பிடுங்கி வைத்துக்கொண்டு, ‘நீ யார்ட்டயும் பேசக்கூடாது’ என்ற காதலரின் அதீத காவலால் நொந்து போனார் இவர். பிறகு காதல் தொடர்ந்து தீப்பிடிக்க, அதை பிரிக்கவும் ஏகப்பட்ட வேலைகள் நடந்தது. பிறகு எப்படியோ டெட் ஆனது காதல். இப்போது அரேன்ஜ்ட் மேரேஜ்தான் நல்லது என்றிருக்கிறார் ஹீரோயின்.

மீரா ஜாஸ்மின்: முதலில் இயக்குனர் ஒருவருடன் காதல். பிறகு அரசியல்வாதி ஒருவருடன் கிசு கிசு எழுந்து மறைந்தது. பின்னர் மாண்டலின் ராஜேஷுடன் காதல். கடந்த வருடம், ‘மீண்டும் காதல் துரோகத்தை சந்தித்தேன்’ என்று ஸ்டேட்மென்ட் விட்டார் மீரா. இப்போது ‘ராஜேஷுடன் அவர் காதலில்தான் இருக்கிறார்’ என்கிறார்கள் பலர். மறுக்கிறார்கள் சிலர்.

நயன்தாரா: முதலில் சிம்புவுடன் தொடங்கி முறிந்தது காதல். அடுத்து ‘வில்லு’ ஷூட்டிங்கில் பிரபுதேவாவுடன் அடுத்த காதல். காதலுக்காக மதம் கூட மாறினார் நயன்தாரா. படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்தார். கல்யாணம் வரை சென்ற காதல், யார் கண் பட்டதோ, பலூனில் விழுந்த ஓட்டையானது. இப்போது ஆர்யாவுடன் கிசுகிசுக்கப்படுகிறார். ‘ச்சே. ச்சே இது நட்பு’ என்கிறார் ஆர்யா.

ஆண்ட்ரியா: பச்சபுள்ள தோற்றம் என்றாலும் அனிருத்துடன் ஆண்ட்ரியா நெருக்கமாக இருந்த போட்டோக்கள் நெட்டில் வந்து நெட்டித்தள்ளியது. ‘அது பழைய லவ். இப்போ இல்ல’ என்றார் ஆண்ட்ரியா. ‘லவ்வுல பிரேக்,அப்’ சகஜம்’ என்றார் அனிருத்.

ரிச்சா கங்கோபத்யாய்: அமெரிக்க ரிட்டர்ன் நடிகை. புகைப்படக்காரர் ஒருவருடன் காதல். ஓட்டலில் அறை எடுப்பது தொடர்பாக பஞ்சாயத்தானதில்தான் காதல் விவகாரம் கடைதெருவுக்கு வந்தது. அடுத்து டுமீல் ஆனதாம் காதல். நடிகை, அமெரிக்கா சென்றுவிட்டார்.

டாப்ஸி: நடிகர் மஹத்துடன் காதல் என்று முதலில் அரசல் புரசல் தகவல். இதை நிரூபிப்பது போல் வந்து விழுந்தது பார்ட்டி ஒன்றில் நடந்த அடிதடி. பிறகு தெலுங்கு நடிகர் ஒருவர் கண்காணிப்பில் இருந்தாராம் நடிகை. இப்போது அங்கும் பிரச்னை என்கிறார்கள்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments