சசிகுமார் நடித்து வரும் பிரம்மன் இறுதி கட்டத்தில்!!!

6th of October 2013
சென்னை::குட்டிப்புலிக்கு பிறகு சசிகுமார் நடித்து வரும் படம் பிரம்மன். சசிக்கு ஜோடியாக லாவண்யா என்ற நியூபேஸ் நடிக்கிறார். முதன் முறையாக சந்தானம் சசிகுமார் இணையும் படம். புதுமுக இயக்குனர் சாக்ரடீஸ் டைரக்ட் செய்கிறார். தெலுங்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக் பண்ணுகிறார். மலையாள ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி.ஜான் ஒளிப்பதிவு செய்கிறார். நா.முத்துகுமார், யுகபாரதி, தாமரை பாடல்களை எழுதுகிறார்.

இப்படி ஒரு பக்கா கமர்ஷியல் படத்துக்கான அத்தனை  விஷயங்களோடும் படம் ரெடியாகுது. சசிகுமார் நடிக்கும் முதல் சிட்டி படம். ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட் என்று அடுத்த கட்டத்துக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறார். சசிகுமாருக்கு இணையான கேரக்டர் சந்தானத்திற்கு. "இந்த தாடிய வச்சிக்கிட்டு எம்புட்டு சேட்டை பண்ற", "நானெல்லாம் கிளைமாக்சுல உன்னை கத்தியால முதுலுல குத்தமாட்டேன் பயப்படாத" என்பது மாதிரியான சந்தானத்தின் பன்ஞ் நக்கல்கள் இருக்கிறதாம்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்புகள் பொள்ளாச்சி பகுதியில் நடந்தது. இப்போது சென்னையில் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தீபாவளிக்கு பிறகு டிசம்பர் மாதத்திலோ அல்லது பொங்கல் பண்டிகையிலோ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பிறகு சசிகுமார் மலையாள படம் ஒன்றிலும், தமிழில் பாலா படத்திலும் நடிக்க இருக்கிறார்.

Comments