அரண்மனை படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக சுந்தர்.சி: ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா என்று ஒரு பெரும் கவர்ச்சிப்படையுடன் துணைக்கு சந்தானத்தையும் கூட்டு சேர்த்திருக்கிறார்: சுந்தர்.சி!!!

3rd of October 2013
சென்னை::சந்தானம் மாதிரி ஒரு காமெடியன் கிடைத்தால் போதும் தங்களுடன் பெரிய படையே இருப்பது போன்று தைரியமாக களமிறங்கி விடுகிறார்கள் சில ஹீரோக்கள். கதை இருக்கிறதோ இல்லையோ, சந்தானத்தின் காமெடி தங்களை கரை சேர்த்து விடும் என்று நினைக்கிறார்கள். அப்படித்தான் ஆர்யா, ஜீவா, கார்த்தி உள்பட பல நடிகர்களின் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடிப்புக்கு லீவு கொடுத்திருந்த டைரக்டர் சுந்தர்.சியும் தற்போது அரண்மனை படத்தின் மூலம் நாயகனாக மீண்டும் கோதாவில் குதிக்கிறார். இப்படத்தில் ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா என்று ஒரு பெரும் கவர்ச்சிப்படையுடன் களமிறங்கும் அவர், துணைக்கு சந்தானத்தையும் கூட்டு சேர்த்திருக்கிறார்.

அதேசமயம் இது அவரது வழக்கமான பாணியில் காமெடி கதை இல்லையாம். த்ரில்லர் படமாம். ஆனால் அதற்குள்ளும் கவர்ச்சிக்கும், காமெடிக்கும் வேலை கொடுத்திருக்கும் சுந்தர்.சி நேற்றில் இருந்து அரண்மனை படப்பிடிப்பை தீயாக தொடங்கி விட்டார். 

Comments