அனுஷ்காவும், காத்ரீனாவும் போட்டி போட்டு நடனம்!!!

24th of October 2013
சென்னை::அட்டக்கத்தி’ இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானவர் காத்ரீன் தெரசா. கன்னட படத்தில் அறிமுகமான இவர், கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.

தற்போது தமிழில் கார்த்தி நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்திலும், அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், தெலுங்கில் அனுஷ்கா நடித்து வரும் சரித்திர படமான ‘ராணி ருத்ரம்மா தேவி’ படத்திலும் அன்னாம்பிகா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கிறாராம்.

தமிழில் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தில் பத்மினியும், வைஜெயந்தி மாலாவும் சேர்ந்து ஆடும் போட்டி நடனம் போலவே, இப்படத்திலும் ஒரு போட்டி நடனம் இருக்கிறதாம். இதில் அனுஷ்காவும், காத்ரீனாவும் போட்டி போட்டு நடனம் ஆடி கலக்கியிருக்கிறார்களாம். இது ரசிகர்களை வெகுவாக கவரும் எனவும் கூறப்படுகிறது. 
tamil matrimony_INNER_468x60.gif

Comments