17th of October 2013
சென்னை::யுகே-யில் நய்யாண்டி முதல்வார இறுதியில் 16,673 பவுண்ட்களை வசூலித்துள்ளது. மொத்தம் 16 திரையிடல்களில் இந்த வசூலை பெற்றுள்ளது. நமது ரூபாய் மதிப்பில் சுமார் 16.33 லட்சங்கள்.
அதே யுகே-யில் வணக்கம் சென்னை தனது முதல்வார இறுதியில் 6 திரையிடல்களில் 7,371 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் ஏறக்குறைய 7.22 லட்சங்கள்.
ராஜா ராணி யுகே-யில் ஒரு கோடியை தாண்டியிருக்கிறது. மூன்றாவது வார இறுதியில் இப்படம் 3,501 பவுண்ட்களை 4 திரையிடல்களில் வசூலித்துள்ளது. இதுவரை இப்படம் 1,12,131 பவுண்ட்களை வசூலித்துள்ளது. ரூபாய் மதிப்பில் 1.10 கோடி.
யுஎஸ் ஸில் நய்யாண்டி தனது முதல் வாரத்தில் 32 திரையிடல்களில் 10.14 லட்சங்களை வசூலித்துள்ளது. வணக்கம் சென்னையில் முதல் வார இறுதி யுஎஸ் வசூல், 12 திரையிடல்களில் 7.71 லட்சங்கள்.
Comments
Post a Comment