நிறைவேறியது தயாரிப்பாளரின் கனவு! ஆமா, இந்த விஷயம் திரிஷாவுக்குத் தெரியுமா?!!!

27th of October 2013
சென்னை::ஜீவா - திரிஷா நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் என்றென்றும் புன்னகை. இப்படத்தைத் தயாரித்திருப்பவர் புதிய தயாரிப்பாளரான ஜி.கே.எம்.தமிழ்குமரன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக சமீபத்தில் நடந்தது. தயாரிப்பாளருக்கு அரசியல் பின்னணி இருப்பதாலோ என்னவோ சத்யம் திரையரங்கில் கட்டுப்படுத்தமுடியாத கூட்டம்! 
 
இசை வெளியீடில் அந்தப் படத்தின் கதாநாயகிகள் கலந்துகொள்வதில்லை என பல தயாரிப்பாளர்களும் புலம்பிக்கொண்டிருக்க, என்றென்றும் புன்னகை படத்தின் நாயகிகள் திரிஷா, ஆன்ட்ரியா என இருவரும் விழாவுக்கு வந்து கேமராவுக்கு விருந்து படைத்தது விழாவின் ஹைலைட்!
 
இப்படத்தின் தயாரிப்பாளர் தமிழ்குமரன் திரிஷாவின் தீவிர ரசிகராம். அதைப்பற்றிய ஒரு சின்ன பிளாஷ்-பேக் நம் காதுக்கு கிடைத்தது. மூன்று வருடங்களுக்கு முன்பாக... சென்னையின் ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த விழாவில் திரிஷா கலந்துகொண்டாராம். அந்த விழாவுக்கு தயாரிப்பாளர் தமிழ்குமரனும் வந்திருக்கிறார். அப்போது, ஒரு போட்டோகிராப்பரிடம் தன்னை திரிஷாவுடன் ஒரு போட்டோ எடுக்க சொல்லி கேட்டுள்ளார் தமிழ்குமரன். ஆனால், போட்டோகிராப்பரரோ மறுத்துவிட்டாராம் - கட்! 

இப்போது அதே போட்டோகிராப்பரை அழைத்து பேசிய தயாரிப்பாளர் தமிழ்குமரன், ‘அன்னைக்கு திரிஷா கூட ஒரு போட்டோ எடுக்க மாட்டேன்னு சொல்லிடீங்க, இப்போ பாத்தீங்களா... அதே திரிஷாவை வைத்து இன்னைக்கு நான் ஒரு படமே எடுத்துட்டேன்’ என்று கனவு நிறைவேறிய கொண்டாட்டத்தில் பேசினாராம்.

ஆமா, இந்த விஷயம் திரிஷாவுக்குத் தெரியுமா?   

Comments