பிரபுதேவாவின் லேட்டஸ்ட் ‘டைம்பாஸ்’ : அப்போ நயன்தாரா, இப்போ சோனாக்‌ஷி சின்ஹா!!!

24th of October 2013
சென்னை::சிலருக்கு மட்டும் தான் அப்படி ஒரு கொடுப்பினை கிடைக்கிறது. அது ஒரு சீஸன் போலவும் அமைந்து விடுகிறது. அப்படித்தான் பிரபுதேவாவின் காதலிகளும் அவ்வப்போது மாறி விடுகிறார்கள்.
‘எங்கேயும் காதல்’ ரிலீஸான சமயத்தில் ஹன்ஷிகா மோத்வானிக்கும், பிரபுதேவாவுக்கு நெருக்கம் என்று செய்திகள் கிளம்பின. ஆனால் உடனே “பிரபுதேவா என்னோட பிரதர் மாதிரி” என்று ஸ்டேட்மெண்ட் விட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹன்ஷிகா.

ஆனால் அடுத்து வந்த நயன்தாராவின் காதலோ ஊரறிந்த விஷயம் தான். முதல் மனைவி இருக்கும் போதே ரெண்டாவது திருமணம் வரை சென்ற பிரபுதேவாவுக்கு பலரும் போன் போட்டு “போயும் போயும் நயன்தாராவையா கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க..?” என்று ஆச்சரியக் கேள்விகளை அடுக்க, அப்படியே அவரை கை கழுவி விட்டார்.

பிறகு சமத்துப் பிள்ளையாக ஹிந்தியில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்த பிரபுதேவா சில மாதங்கள் ஃசைலண்ட்டுக்குப் பின் மீண்டும் ஒரு காதல்கசமுசாவில் அடிபட ஆரம்பித்திருக்கிறார்.

பிரபல ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவுடன் அவர் நெருக்கம் காட்ட ஆரம்பித்திருக்கிறார் என்பதே அந்த கசமுசா சமாச்சாரம். பிரபுதேவா ஹிந்தியில் அக்‌ஷய்குமாரை வைத்து டைரக்ட் செய்த ‘ரெளடி ரத்தோர்’ படத்தின் ஹீரோயின் சோனாக்‌ஷி சின்ஹா தான். அப்போதே ஏற்பட்ட பழக்கம் இப்போது நெருங்கிப் பழகும் அளவுக்கு டீப்பாக போய்க் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.

அதனால் தானோ என்னவோ பிரபுதேவா மீண்டும் ஹிந்தியில் டைரக்டர் செய்யும் புதிய படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவையே ஹீரோயினியாக்கி அழகுபார்க்கிறாராம்.

ஏற்கனவே தனது குழந்தைகளுக்காக நயன்தாராவுடன் காதலை முறித்துக் கொண்ட பிரபுதேவா இப்போதும் அப்படி ஒரு ‘டைம்பாஸ்’ போன்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு..

பிரபுதேவாவுக்கும் இந்தி நடிகை சோனாக்சி சின்ஹாவுக்கும் இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. பிரபுதேவா இந்தியில் பிசியான டைரக்டராக உள்ளார். அக்சய்குமார், சோனாக்சி சின்ஹாவை ஜோடியாக வைத்து இயக்கிய ‘ரவுடி ரத்தோர்’ படம் வெற்றிகரமாக ஓடியது.

இதையடுத்து மீண்டும் சோனாக்சி சின்ஹாவை நாயகியாக வைத்து ஆர். ராஜ்குமார், ஆக்சன் ஜாக்சன் என இரு படங்களை டைரக்டு செய்து வருகிறார். ஆக்சன் ஜாக்சன் படத்தில் சோனாக்சி சின்ஹா ஜோடியாக அஜய்தேவ்கான் நடிக்கிறார். பிரபுதேவா படத்தில் நடிக்க அசின் உள்பட பல நடிகைகள் விருப்பம் தெரிவித்தும் சோனாக்சியையே தேர்வு செய்து வருகிறார்.

இருவருக்கும் படப்பிடிப்பில் நெருக்கம் ஏற்பட்டதாகவும் காதல் துளிர்த்துள்ளது என்றும் மும்பை பட உலகம் கிசுகிசு வெளியிட்டு உள்ளது. எனவேதான் தனது படங்களில் சோனாக்சியையே ஒப்பந்தம் செய்கிறார் என்று கூறப்படுகிறது.

செஞ்சிடுங்க பிரபுதேவா..?

tamil matrimony_INNER_468x60.gif

Comments