புதிய படங்களில் நடிக்க மாட்டேன்: சமந்தா அறிவிப்பு!!!

6th of October 2013
சென்னை::நடிகை சமந்தா திடீரென ஸ்டிரைக் பண்ணப் போவதாக அறிவித்துள்ளார். பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் சமந்தா.
 
தொடர்ந்து மாஸ்கோவின் காவிரி, நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் நடித்த இவருக்கு நான் ஈ திரைப்படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த வெற்றி சமந்தாவை சூர்யா, விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு உயர்த்தியது.
 
இந்நிலையில் டிவிட்டரில் சமந்தா ஒரு திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதை ‘ஸ்டிரைக்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.“இனி எந்த புதுப்படங்களிலும் நடிக்கப் போவதில்லை. எனக்குப் பிடித்தமான சிறந்த கதாபாத்திரம் கொண்ட படங்கள் கிடைக்கும் வரை இந்த முடிவு. ஏற்கெனவே நடிக்க ஒத்துக் கொண்ட படங்களில் நடித்து முடிப்பேன். எனது திறமையை சரியாக வெளிப்படுத்தா விட்டால் என்னை ஒதுக்கி விடுவார்கள், அதனால்தான் இப்படி முடிவெடுத்திருக்கிறேன்,” என்று கூறியிருக்கிறார்.
 
தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தாவின் இந்த அறிவிப்பு தயாரிப்பாளர்களிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாலேயே இந்த முடிவு என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. அண்மையில் சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியான 'அத்தரின்டிக்கி தாரெடி' வசூல் சாதனை புரிந்து வருகிறது.

Comments