மீண்டும் பரபரப்பு நடிகையான தமன்னா!!!

25th of October 2013
சென்னை::வேங்கைதான் தமிழில் தமன்னா நடித்து கடைசியாக வெளிவந்த படம். அதன்பிறகு இந்திக்கு சென்று ஹிம்மத்வாலாவில் நடித்தார். ஆனால் அப்படம் ஊத்திக்கொள்ளவே, மறுபடியும் தமிழ், தெலுங்கு என்று தென்னிந்தியா பக்கம் வந்து விட்டார். அப்படி வந்தவருக்கு ஆரம்பத்தில் சரியான என்ட்ரி கிடைக்காமல் போனது.

ஆனால், இப்போது தமிழில் அஜீத்துடன் வீரம் படத்தில் நடித்து வரும் தமன்னா, தெலுங்கில், மகேஷ்பாபுவுடன் இரண்டு படம், இந்தியில் அக்ஷய்குமாருடன் நடிக்கும் இட்ஸ் எண்டர்டெயின்மென்ட் உள்பட இரண்டு படம் என மறுபடியும் பரபரப்பில் கொளுந்து விட்டு எரிகிறார். சென்னை, ஐதராபாத், மும்பை என்று எப்போது எந்த ஸ்பாட்டில் இருக்கிறார் என்பதே தெரியாத அளவுக்கு அம்மணி படு பிசியாகி விட்டார்.

இந்த நேரத்தில், சிறுத்தை படத்தையடுத்து அதே இயக்குனர் சிவாவின் வீரம் படத்தில் நடிப்பது போன்று, தனது முன்னாள் இயக்குனர்கள் சிலரையும் தேடிப்பிடித்து படவேட்டையில் ஈடுபட்டிருக்கிறார் தமன்னா. அப்படி செல்லும்போது, நான் இந்தியில் பிரபல நடிகையாகி விட்டேன். அதனால் கோடி ரூபாய் சம்பளத்தை வெட்ட வேண்டும் என்றெல்லாம் முன்பு போல் பந்தா பண்ணாமல் பவ்யமாக பேசும் தமன்னா, மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டுமே ஜோடி சேருவேன் என்ற கண்டிசனை மட்டும் தனது சார்பில் அவர்களிடம் எடுத்து வைக்கிறாராம்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments