24th of October 2013
சென்னை::அட்டக் கத்தி’ நந்திதா, இப்போதெல்லாம், இறங்கி அடிப்பது என்ற முடிவுக்கு வந்து விட்டார் போலிருக்கிறது. அடக்க, ஒடுக்கமான, குடும்ப பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தால், இளம் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்க முடியாது என்பதுடன், கல்லா கட்டாவும் முடியாது என்பதையும், தெரிந்து கொண்டு விட்டாராம். இதனால், குடும்ப
பாங்கான வேடம் மட்டுமல்லாமல், காமெடி, கிளாமர், சீரியஸ் என, வித விதமான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.
தற்போது, ‘முண்டாசுப் பட்டி’ என்ற படத்தில் நடிக்கிறாராம். மதுரை கதைக் களத்தில் தயாராகும் இந்த படத்தில், பக்கா மதுரைப் பெண் வேடத்தில் நடிக்கிறாராம், நந்திதா. இது, அவருக்கு புது அனுபவமாக இருப்பதுடன், மனதுக்கும், ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறதாம். வாயாடி பெண் கேரக்டர் என்பதால், படப் பிடிப்பு நடக்கும்போது, அதை வேடிக்கை பார்க்க வரும் ரசிகர்களுடன், கல கலப்பாக பேசி, தன்னை தயார் படுத்திக் கொள்கிறாராம்.

Comments
Post a Comment