’ஹீரோ’ ஆகிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா?!!!

27th of October 2013
சென்னை::இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் 100-வது திரைப்படத்தின் ஆல்பம்(பிரியாணி) சமீபத்தில் ரிலீஸாகி மாபெரும் வெற்றிபெற்றது. 100 படங்களுக்கு மேல் இசையமைத்துவிட்ட யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும், சில பாடல்களில் திரையில் தோன்றியும் நடித்தும் இருக்கிறார். 

நடிப்பு, குரல்வளம் என இரண்டுமே இருக்கும் யுவன் திரைப்படத்தில் நடிக்கவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் யுவன் ஒரு திரைப்படத்தில் நடிக்க்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், அஜித் நடித்த பில்லா 2 திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சக்ரி டொலட்டி இயக்கத்தில் யுவன் நடிக்க ஏற்பாடுகள் நடந்துவருகிறதாக தெரிகிறது.

இதுபற்றி பேசிய சக்ரி டொலட்டியிடம் கேட்டபோது “நானும் யுவனும் கிட்டத்தட்ட மூன்று புராஜக்டில் இணைந்து பணியாற்றுகிறோம். என்னுடைய ஒரு குறும்படத்திற்கு கூட யுவன் தான் இசையமைக்கிறார். யுவன் என் படத்தில் நடிக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது” என்று கூறிவிட்டாராம். 
 

Comments