சிம்பு-பாண்டிராஜ் இணையும் புதிய படம் தொடங்கியது!!!

22nd of October 2013
சென்னை::சிம்பு-பாண்டிராஜ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று  தொடங்கியது.
பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களை இயக்கியவர் பாண்டிராஜ். இவர், அடுத்ததாக சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கப் போவதாகவும் அதில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாக இருப்பதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் சிம்பு-பாண்டிராஜ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இப்படம் காதல், நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் சிம்பு கிராமத்து இளைஞராக நடிக்கவிருக்கிறார். படத்திற்கான டைட்டில் தேர்வும், நாயகி தேர்வும் நடைபெற்று வருகிறது. சிம்பு ஏற்கனெவே ‘வாலு, வேட்டை மன்னன், இங்க என்ன சொல்லுது’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

படத்துக்கு போட்டிருக்கும் பட்ஜெட் ரூ 8 கோடி. சொந்தப்படம் என்பதால் சொதப்பாமல் சிம்பு நடித்துவிடுவார் என்ற அபார நம்பிக்கையில் இந்தத் தொகையை நிர்ணயித்திருக்கிறார்கள். படத்தை முதல் பிரதி அடிப்படையில் இயக்குனர் பாண்டிராஜ் தயாரிக்கிறார். ஆனாலும் டிஆர்தான் படத்தின் நிஜமான தயாரிப்பாளர் என்கிறார்கள்.

Comments